அமெரிக்காவை
தலைமையிடமாக கொண்ட அமேசான் நிறுவனம் இணையதள சில்லறை வர்த்தகத்தில் பெரிய
நிறுவனமாகக் கருதப்படுகின்றது. ஆரம்பத்தில் புத்தக விற்பனையில் ஈடுபட்ட
இந்த நிறுவனம், எலெக்ட்ரானிக் பொருட்கள், வீடியோ பொருட்கள், மென்பொருள்,
ஆபரணங்கள் என பல துறைகளிலும் இன்று விற்பனையில் முன்னணியில் உள்ளது. பல
நாடுகளிலும் இணையதளம் மூலம் இந்த நிறுவனத்தின் விற்பனை தளங்கள் செயல்பட்டு
வருகின்றன. தற்போது இந்தியாவிலும் அமேசான் நிறுவனம் தனது விற்பனைத்
தளத்தைத் தொடங்க உள்ளது.
அமேசானின் இந்திய நிர்வாகியான அனில் அகர்வால் இந்த நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளும் இந்திய விதிமுறைகளுக்கு உட்பட்டே இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். பொதுவாக, இந்திய விதிமுறைகளின்படி எந்த ஒரு அந்நிய நிறுவனமும் இந்தியாவில் அதன் விற்பனையில் முழுவதுமாக உரிமை செலுத்தமுடியாது. ஆனால் அமேசான் நிறுவனம் புத்திசாலித்தனமாக விற்பனையாளர்களுக்கான இடைத்தரகு நிறுவனமாக தங்களை வெளிப்படுத்திக் கொண்டு இந்திய அரசாங்கத்திடம் அனுமதி பெற்றுள்ளது.
அமேசான் நிறுவனம் முதலில் 7 மில்லியன் புத்தகத் தலைப்புகளையும், 13,000 திரைப்படத் தலைப்புகளையும் விற்பதற்கு இருக்கின்றது. பின்னர் காமிராக்கள், போன்கள் போன்ற விற்பனையில் இறங்கும் திட்டத்தில் உள்ளது. மற்ற விபரங்கள் எதுவும் கூற அகர்வால் மறுத்துவிட்டார். அமேசான் தன்னுடைய விற்பனையில் இடம்பெற்றுள்ள பிரிக்அண்ட் மோர்டர் சில்லறை விற்பனை நிறுவனத்திற்கு 51 சதவிகித வெளிநாட்டு உரிமத்தை அளித்துள்ளது. அதுபோல், இந்தியாவிலும் வெளிநாட்டு நேரடி முதலீட்டு வர்த்தகத்தை இணையதளத்தில் பெறும் முயற்சியில் அமேசான் இறங்கியுள்ளது.
ஃ பிலிப் கார்ட், ஸ்னப்டீல், ஜபாங் மற்றும் இந்தியா டைம்ஸ் போன்ற இணையதள விற்பனையாளர்களுக்குப் போட்டியாக அமேசான் களம் இறங்குகின்றது. ஏற்கனவே, செலவினங்களைக் குறைத்து புதிய வாடிக்கையாளர்களைப் பெறும் முயற்சியில் உள்ள இந்த நிறுவனங்களுக்கு அமேசானும் சவால் அளிக்கக்கூடும்.
130 மில்லியன் இணையதள வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்தியாவின் இணையதள வர்த்தகம் விரிவாகவே உள்ளது. ஆயினும் புதிய வாடிக்கையாளர்களைப் பிடிக்கும் அவசரத்தில் இணையதள நிறுவனங்கள்தான் பணத்தை இழக்கின்றன என்று கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment