Friday, 7 June 2013

உலக பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் தோனிக்கு 16வது இடம்!


விளையாட்டுத் துறையில் அதிகம் பணம் சம்பாதிக்கும் செல்வந்த வீரர்களுக்கான ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி 16ஆம் இடத்தில் உள்ளார்.


முதலிடம் பிடித்திருப்பவர் கால்ஃப் வீரர் டைகர் உட்ஸ். தோனியின் ஆண்டு வருவாய் 31.5 மில்லியன் டாலர்கள்!

2012ஆம் ஆண்டு 31ஆம் இடத்தில் இருந்த தோனி இப்போது 15 இடஙள் முன்னேறி 16வது இடத்தில் உள்ளார். சபாஷ் சரியான முன்னேற்றம். பின் எதற்கு இதெல்லாம்?

டைகர் உட்ஸ் 78.1 மில்லியன் டாலர்களுடன் முதலிடம், 2வது இடத்தில் டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் இவரது வருவாய் 71.5 மில்லியன் டாலர்கள்.

டென்னிஸ் வீராங்கனையும் மாடலாகவும் விளங்கும் ஷாரபோவா, செரீனா வில்லியம்ஸ் ஆகியோரை விடவும் தோனி அதிகம் சம்பாதித்துள்ளார்.

இது மட்டுமல்ல உலக தடகள அதிவேக மன்னன் என்று அழைக்கப்படும் உசைன் போல்ட், ஃபார்முலா 1 கார் பந்தய வீரர்களான அலான்சோ, ஹேமில்டன், ஆகியோரையும் தோனி கடந்து விட்டார்.

நடால், ஜோகோவிச் ஆகியோரெல்லாம் தோனியை விடவும் பின் தங்கியுள்ளனர். சபாஷ் தோனி.!

அடுத்த பட்டியலில் முதலிடம் பெற வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment